ஹோலி பண்டிகை - நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்டுப்புற கலைஞர்கள்

ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் ஹோலி பண்டிகையையொட்டி கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில், பல்வேறு விதமான நடனங்களை ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

Update: 2022-03-17 09:10 GMT
ராஜஸ்தானைச் சேர்ந்த நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் ஹோலி பண்டிகையையொட்டி கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில், பல்வேறு விதமான நடனங்களை ஆடிப் பாடி மகிழ்ந்தனர். வடமாநிலங்களில் வசிக்கும் மக்கள் ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி, அஸ்ஸாமில் ஹோலி பண்டிகையையொட்டி, நடைப்பெற்ற நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் இசைக்கு ஏற்றார் போல் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்