தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் விளக்கம்

ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-16 20:51 GMT
ரயில்வேயை  தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே மானியக்கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ரயில்வே துறையில் காலியாக உள்ள 3 லட்சத்து 44 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக, ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 740 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரயில்வேயை  தனியார் மயமாக்கப்பட உள்ளதாக  கூறுவது முற்றிலும் அபத்தமான வாதம் என்றும் அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் ரயில்வே துறை மானிய கோரிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்