5 மாநிலங்களில் ஆட்சி அமைப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

Update: 2022-03-09 21:18 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி, பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட்டில் இழுபறிக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி உள்ளதால், அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதேபோல, 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்