உக்ரைன் போர் எதிரொலி - உச்சம் தொட்ட சூரியகாந்தி எண்ணெய் விலை

உக்ரைன் போரின் விளைவாக, இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

Update: 2022-03-09 14:50 GMT

கடந்த ஒரு வாரத்தில் சூரியகாந்தி எண்ணெய் விலை 6.15 சதவீதம் அதிகரித்து லிட்டருக்கு 166 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 11.38 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டில், இந்திய அளவில், 22 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 80 சதவீதம் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.


உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் மற்றும் இதர இறக்குமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவை, ஆண்டுக்கு சுமார் 28 லட்சம் டன்னாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி 95 ஆயிரம் டன்னாக உள்ளது. 

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைகளில் 56 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மொத்த இறக்குமதியில் சூரியகாந்தி எண்ணேயின் விகிதம் 19 சதவீதமாக உள்ளது.


பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் சோயா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சோயா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

*****************


Tags:    

மேலும் செய்திகள்