பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்
கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண் அதிகாரி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் விமானப்படை மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை செய்யப்பட்டதாக அந்த பெண் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விமானப்படை தலைவர் விஆர் சவுத்ரி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இந்திய விமானப்படையின் சட்டம் மிக கடுமையானது என்றதுடன், பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்ணிற்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றார்.