உச்சக்கட்ட பரபரப்பில் பபானிபூர் தொகுதி - வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மம்தா...

மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-03 06:17 GMT
மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்த கடந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அப்போது, சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வான மம்தா முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், அந்த தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெறாத நிலையில், 6 மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் போட்டியிட ஏதுவாக பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, பவானிபூர், ஜாங்கிபூர், ஜாம்ஜெர்க்கஞ்ச் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 6 மாதத்துக்குள் மீண்டும் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். 53 சதவித வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், அரசு பள்ளியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகி உள்ளது. அங்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை நாடே உற்று நோக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்