கூட்டாளியுடன் கொள்ளையில் ஈடுபட்ட மகன் - போலீசிடம் ஒப்படைத்த தாய்
திருத்தணி அருகே கொள்ளையில் ஈடுபட்ட மகனை, கூட்டாளியுடன் சேர்த்து, அவரது தாயே போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார்.
திருத்தணி அருகே கொள்ளையில் ஈடுபட்ட மகனை, கூட்டாளியுடன் சேர்த்து, அவரது தாயே போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவர், தனது கூட்டாளி சிக்கந்தருடன், திருத்தணியில் உள்ள நகை கடைக்கு சென்றுள்ளார். பின்னர், நகை வாங்குவது போல் நாடகமிட்ட கங்காதரன், தனது கூட்டாளியுடன் சேர்ந்து 12 சவரன் மதிப்பிலான 4 செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இந்நிலையில், கங்காதரன் நடந்ததை தனது தாயாரிடம் கூறவே அவர் இருவரையும் நகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.