மே.வங்க இடைத்தேர்தல்; இன்று முடிவு - முதல்வர் பதவியை தக்க வைப்பாரா மம்தா?

மேற்குவங்க மாநிலத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி தக்க வைப்பாரா? என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.

Update: 2021-10-03 04:07 GMT
மேற்குவங்க மாநிலத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி தக்க வைப்பாரா? என்பது மாலைக்குள் தெரிந்து விடும். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா தோல்வியடைந்திருந்தாலும், முதல்வராக பதவியேற்று கொண்டார். இந்நிலையில் பதவியேற்று 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டிய கட்டாயம் காரணமாக, பவானிப்பூர் தொகுதியில் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. 21 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்