காணொலி வாயிலாக பெண்களுடன் உரையாடல் - குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்த பிரதமர்
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் ஜல் ஜீவன் திட்டம், பெண்களின் இயல்பு வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் ஜல் ஜீவன் திட்டம், பெண்களின் இயல்பு வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, குடிநீர் விநியோகம் மற்றும் ஆரணி பட்டின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். காந்தி ஜெயந்தியை ஒட்டி இந்தியாவில் உள்ள 5 கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அதில் ஒன்றாக ஜல் ஜீவன் திட்டம் மூலம் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட்ட வெள்ளேரி கிராம மக்களிடையே பேசினார். தமிழில் வணக்கம் என கூறி உரையாடலை தொடர்ந்த மோடி, எளிதாக குடிநீர் கிடைப்பதால் பெண்களுக்கு பலனளிக்கின்றதா என்பதை கேட்டறிந்தார். மேலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.