உலகம் எங்கும் சுற்றுலா செல்லும் தம்பதி - அக்.21 - ல் ரஷ்யா செல்ல திட்டம்
கேரளா மாநிலம் கொச்சியில் டீக்கடை நடத்தும் தம்பதி விஜயன் - மோகனா, ரஷ்யா செல்ல அந்த மாநில அமைச்சர் முகமது ரியாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
கேரளா மாநிலம் கொச்சியில் டீக்கடை நடத்தும் தம்பதி விஜயன் - மோகனா, ரஷ்யா செல்ல அந்த மாநில அமைச்சர் முகமது ரியாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 70 வயதான விஜயன் தமது மனைவி மோகனாவை, உலகெங்கும், அழைத்து செல்ல, விருப்பம் கொண்டுள்ளார். அதன் படி பணத்தை சேமித்து, எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட 25 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்நிலையில் 26 வது நாடாக ரஷ்யாவிற்கு அக்டோபர் மாதம் 21 தேதி செல்கின்றனர். இந்த தம்பதியை கேரளா சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.