கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்கான கட்டணம்.. "கேரள அரசின் உத்தரவை மாற்ற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்காக வறுமை கோட்டுக்கு மேல் உள்ள பிரிவினருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவத்தில் கேரள அரசின் உத்தரவை மாற்ற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கேரள அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் விமர்சித்தது. கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக வறுமை கோட்டுக்கு மேல் உள்ள பிரிவுக்கு கட்டணம் வசூலிக்கும் வழக்கில் அரசின் நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உத்தரவை திருத்துமாறு நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் முற்றிலும் இலவசமாக இருந்த கொரோனாவுக்குப் பிந்தைய நோய்களுக்கான சிகிச்சைக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, ஒரு படுக்கைக்கு நாள் ஒன்றுக்கு ரூ .750 முதல் ரூ .2,000 வரை கட்டணம் வசூலிக்குமாறு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.