34 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா - கேரள சென்ற மாணவி மூலம் வைரஸ் பரவல்

பெங்களூருவில் தனியார் செவிலியர் கல்லூரியை சேர்ந்த 34மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் விடுதிகளில் தங்கி மாணவ, மாணவிகள படித்து வந்துள்ளனர்.

Update: 2021-09-03 10:29 GMT
இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு மாணவி கேரளா சென்று வந்த நிலையில் கொரோனா தொற்று பரவியுள்ளது. அந்த மாணவியுடன் விடுதியில் தங்கி இருந்த 3 மாணவிகளுக்கும் வைரஸ் பரவ, அவர்கள் மூலம் கல்லூரியில் உள்ள 22 மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டது. இதேபோன்று கல்லூரியில் படித்து வந்த 12 மாணவர்களுக்கும் வைரஸ் பரவியது. இதையடுத்து, கல்லூரி மற்றும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட34 பேரும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்