"அக்டோபரில் 3-வது அலை உச்சம் தொடக்கூடும்" - தயார் நிலையில் இருக்க அரசுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடக்கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொரோனா 3வது அலை தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு, பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடக் கூடும் என்றும்,
குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,
குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை செலுத்துவதில், அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இணை நோய்கள் இருக்கும் குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.