தினக் கூலியாக மாறிய தடகள வீராங்கனை - ரூ.205 தினக்கூலி-தேயிலை தோட்டத்தில் பணி
2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தீபம் ஏந்திச் சென்ற பிங்கி கர்மாகர், தேயிலைத் தோட்டத்தில், தற்போது தினக் கூலியாக வேலை செய்து வருகிறார்.
தடகள வீராங்கனையான அவர், 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு கண்டுகொள்ளப்படவில்லை என்றார். தேயிலை தோட்டத்தில், 205 ரூபாய் தினக்கூலியாக மாறியுள்ள அவர், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், எந்தப் பணி வாய்ப்பும் வழங்கவில்லை என வேதனை தெரிவித்தார். எவ்வித பயன்களையும் யாரும் வழங்கவில்லை என்றும், தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறும் பிங்கி கர்மாகர், தனது கனவுகள் நொறுங்கிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.