மாநிலங்களவை திங்கள் வரை ஒத்தி வைப்பு: பதாகை ஏந்தி கூச்சலிட்ட எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2021-08-06 09:56 GMT
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் 14 வது நாளான இன்று  காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அப்பொழுது ஒலிம்பில் போட்டியில் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தஹியாவுக்குக்கு அவையின் துணைத்தலைவர்  ஹரிவான்ஷ் நாராயண சிங் பாராட்டு தெரிவித்தார். பின்னர் கேள்வி நேரத்திற்கான அறிக்கைகள் எடுத்து வைத்து கொண்டிருந்த போது கையில் பதாகைகளுடன் வந்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அறிக்கையை தாக்கல் செய்யும் போது அது சார்ந்த ஜல்சக்தி துறை அமைச்சர் ஏன் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், தான் உரிய விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். முன்னதாக பேசிய ஹரிவான்ஷ் நாராயண சிங், பெகாசஸ் மற்றும் விவசாய சட்டம் குறித்து அமளியில் ஈடுபட்டு வரும் 9 பேரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் மற்றும் பெகாசஸ் பிரச்சனை குறித்து பேச அவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். எனினும், கேள்வி நேரத்தின் போது அவைத்தலைவரின் இருக்கையை சூழ்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதால்,  நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்