சர்வதேச பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விதிமுறை
கொரோனா சோதனைகளின் அடிப்படையில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.
கொரோனா சோதனைகளின் அடிப்படையில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார். மூன்ற நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவரோவை சந்தித்து உரையாடிய பின், இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். சர்வதேச பயணம் செய்பவர்களுக்கு, பயணத்திற்கு முன்பும், பின்பும் கொரோனா சோதனைகள் செய்து, அதன் அடிப்படையில் அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆனால் சில நாடுகள் சர்வதேச பயணிகளுக்கு, கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதற்கான சான்றிதழின் அடிப்படையின் அனுமதியளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டினார். இந்தியா, ரஷ்யா மீது பாரபட்சம் காட்டப்படுவதை தடுக்கவும், இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்வதை எளிதாக்கவும் தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். கொரோனா தடுப்பூசிகள் அரசியல் ஆக்கப்படுவதை இரண்டு நாடுகளும் எதிர்ப்பதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் விவகாரம் பற்றி இந்தியாவுடன் ரஷ்யா ஒத்துழைக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவரோவ் கூறினார்.