குறை தீர்க்கும் அதிகாரி நியமன விவகாரம் - ட்விட்டர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம்
ட்விட்டர் நிறுவனம் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காமல் காலம் தாழ்த்துவதாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின்படி ட்விட்டர் சமூக வலைதளம் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் இதுவரை அதிகாரியை நியமிக்காத நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்த விசாரணையில், இன்னும் எவ்வளவு காலம் இதற்காக எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி ரேகா பல்லி கேள்வி எழுப்பியுள்ளார்.