"சுமார் 37 கோடி தடுப்பூசிகள் விநியோகம்" - மத்திய அரசு தகவல்
மாநிலங்களுக்கு இதுவரை 37 கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்து 840 கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மாநிலங்களுக்கு இதுவரை 37 கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்து 840 கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுவரை சுமார் 35 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சுமார் ஒன்றரை கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களில், கூடுதலாக 23 லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.