கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்த நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்த நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படாததால், தற்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கடைகள், ஓட்டல்கள், பார்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், மருந்து, பழங்கள், காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் 50 பேரும், இறுதிச் சடங்கு நிகழ்வில் 5 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி, 50 சதவீதம் ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் மே 10ம் தேதி காலை 6 மணி முதல் 24ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.