கொரோனா பாதிக்கப்பட்ட சடலம்... - முழுமையாக பேக்கிங் செய்யாமல் ஒப்படைப்பு

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்ட சடலத்தை சரியாக பேக்கிங் செய்யாமல் உறவினர்களிடம் வழங்கிய சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுள்ளது

Update: 2021-05-08 07:33 GMT
கேரள மாநிலம் திருச்சூர் அருகே   ஆம்பலூர் அப்பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர்  தலையில் ஏற்பட்ட காயத்திற்காக ஜூபிலி மிஷன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தள்ளார்,. சிகிச்சை பலனின்றி பார்வதி உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது,. பின்னர் பார்வதியின் சடலத்தை கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைப்படி முறையாக பேக்கிங் செய்யாமல்  உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம்  பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக  தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள கேரள உயர்நீதிமன்றம் திருச்சூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது
==

Tags:    

மேலும் செய்திகள்