கணினி, செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் சூறை - நிறுவனத்தின் பணியாளர்களே சூறையாடியதால் பரபரப்பு
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை, அங்கு பணிபுரியும் ஊழியர்களே அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நரசாபுரா பகுதியில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் ஐபோன், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இங்கு கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் பணிக்கு வர தொழிற்சாலை நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், நிறுவனத்தில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களையும் தீயிட்டு கொழுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.