கேரள மாநிலத்தில் குறையாத கொரோனா தொற்று - சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில், சபரிமலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-12-12 11:01 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது.16ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தால், சபரிமலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் தினமும் மூன்று முறை பக்தர்கள் செல்லும் அனைத்து பாதைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வதுடன், கிருமி நாசினி கலந்த தண்ணீரில் கால்களை நனைத்த பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்படுகிறது. போலீசார் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்தவர்கள், பிபிஇ கிட் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்