10 ஆம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பூமி பூஜை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
பிரதமர் மோடி வரும் 10 ஆம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்ய உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் உட்பட ஐந்து சிலைகளும் கட்டுமான பணிகள் காரணமாக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், திட்டம் முடிந்ததும் புதிய வளாகத்திற்குள் உள்ள முக்கிய இடங்களில் அவை மீண்டும் நிறுவப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்ட்ரல் விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தற்போதுள்ள கட்டிடத்திற்கு அருகில் புதிய கட்டிடம் கட்டப்படும், மேலும் கட்டுமான பணிகள் தொடங்கி 21 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ட்ரல் விஸ்டாவின் மறுவடிவமைப்பு திட்டம், ஒரு பொதுவான மத்திய செயலகம் மற்றும் 3 கி.மீ நீளமுள்ள ராஜ்பாத்தை புதுப்பித்தல், ராஷ்டிரபதி பவன் முதல் இந்தியா கேட் வரை பணிகள் நடைபெறுகிறது.