நல்லிணக்கத்தை கொண்டாடும் பண்டிகை - பிரதமர் நரேந்திர மோடி ஓணம் வாழ்த்து
ஓணம் பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இது ஒரு தனித்தன்மையான விழா என்றும், நல்லிணக்கத்தை கொண்டாடும் விழா என்றும் தெரிவித்துள்ளார். கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என தமது வாழ்த்து செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.