கொரோனாவுக்கு பின் இந்தியாவின் முதல் சட்டசபை தேர்தல் : அக். அல்லது நவ.-ல் பீகாரில் சட்டசபை தேர்தல்

பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கொரோனா நோயாளிகள் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-27 12:46 GMT
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நவம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் தேர்தல் ஆணையம் சில சலுகைகளை கொண்டுவந்துள்ளது. இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களே தபால் ஓட்டு போட்டு வந்த நிலையில், தற்போது அந்த வயது வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று சந்தேகம் உள்ளவர்களும் தபால் ஓட்டு போட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்