மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி வாபஸ் - டெல்லி அரசு அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
டெல்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா கட்டணம் இன்று முதல் வாபஸ் பெறப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக டெல்லி அரசு மதுபானங்களுக்கு சிறப்பு கட்டணத்தை விதித்தது. கூடுதல் வருவாயை பெறும் நோக்கில் 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களில் மதுபானங்களின் விலைகளை அந்த மாநில அரசுகள் அதிகரிக்கவில்லை. இதனால், டெல்லி மக்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று குறைந்த விலையில் மதுபானங்களை வாங்கி வந்தனா். இதன் காரணமாக டெல்லியில் மதுபான விற்பனை குறைந்தது. இதனிடையே டெல்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா சிறப்பு கட்டணத்தை அரசு திரும்ப பெற்றது. இருந்த போதிலும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.