குறைந்த விலையில் திருப்பதி லட்டு விற்பனை - முக்கிய நகரங்களில் லட்டு விற்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மார்ச் மாதம் இருபதாம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் சுவாமிக்கு ஆறுகால பூஜை நடைபெற்று வருகிறது.

Update: 2020-05-21 03:22 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மார்ச் மாதம் இருபதாம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் சுவாமிக்கு ஆறுகால பூஜை  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி  பக்தர்களின்  வேண்டுகோளுக்கிணங்க திருமலையில் 50 ரூபாய்க்கு விற்கப்படும் லட்டு 25 ரூபாய் விலையில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  தேவஸ்தான ஊழியர்களுக்கு எந்தவித சம்பள பிடித்தம் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்