மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சொத்து மதிப்பு ரூ.143.23 கோடி

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சொத்து மதிப்பு 143 புள்ளி 23 கோடி என தெரிய வந்துள்ளது.

Update: 2020-05-12 04:19 GMT
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உத்தவ் தாக்கரே உறுப்பினராக தற்போது இல்லை. இந்நிலையில், வரும் 21 ஆம் தேதி நடைபெறும் மேலவை தேர்தலுக்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு 143 புள்ளி 26 கோடி ரூபாய் சொத்தும், 15 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  

அசையும் சொத்துக்கள் 61 கோடியே 89 லட்சத்து 57 ஆயிரத்து 443 ரூபாய் அளவுக்கும், அசையா சொத்துக்கள் 81 கோடியே 37 லட்சத்து 17 ஆயிரத்து 320 ரூபாய் அளவுக்கு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 15 கோடியே 50 லட்சத்து 36 ஆயிரத்து 733 ரூபாய் கடன் உள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளது. 
உத்தவ் தாக்கரேவின் தனி சொத்து மதிப்பு 76 புள்ளி 59 கோடியாகவும், அவரது மனைவி ரேஷ்மி தாக்ரேவின் தனி சொத்து மதிப்பு 65 புள்ளி 09 கோடி என குறிப்பிட​ப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே பெயரில் சொந்தமாக கார் இல்லை என்பது அதில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  மகன்கள் தன்னை சார்ந்து வாழ்பவர்கள்  என குறிப்பிடப்படாததால் அவர்களது சொத்து விவரங்கள் பிரமாணப் பத்திரத்தில் இடம் பெறவில்லை. இது தவிர உத்தவ் தாக்கரே மீது 23 புகார்கள் உள்ளதாகவும், இவற்றில் 14 புகார்கள் கார்ட்டூன் சம்மந்தப்பட்டவை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்