கொரோனாவால் உயரிழந்ததோர் உடல்களை புதைக்க தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மும்பை அருகே உள்ள மேற்கு பாந்த்ரா மயானங்களில் கொரோனா நோயாளிகளை புதைக்க தடைவிதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2020-05-04 09:57 GMT
மும்பை அருகே உள்ள மேற்கு பாந்த்ரா மயானங்களில் கொரோனா நோயாளிகளை புதைக்க தடைவிதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மயானத்தின் அருகே மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், வேறு இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், உடல்களை அடக்கம் செய்ய இடைக்கால தடை விதிக்குமாறும் குடியிருப்போர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால தடைவிதிக்க மும்பை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே மறுத்து விட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. காணொலி காட்சி மூலம் எஃப் . நாரிமன், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் அமர்வு இம்மனுவை விசாரித்தது. உயிரிழந்தோரின் சடலங்கள் வாயிலாக கொரோனா தொற்று பரவும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததோடு, இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்