ஊரடங்கு மூன்றாவது முறை நீட்டிப்பின் நோக்கம் என்ன? - மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

ஊரடங்கு 3 வது முறையாக நீட்டிக்கப்படுவதன் நோக்கம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என பிரதமர் மோடிக்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-05-03 02:53 GMT
ஊரடங்கு 3 வது முறையாக நீட்டிக்கப்படுவதன் நோக்கம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என பிரதமர் மோடிக்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர்,  ஊரடங்கு 3 வது முறையாக என்ன நோக்கங்களுக்காகப் பிறப்பிக்கப்பட்டது என்று விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.  இந்த முறை பிரதமர் மக்களிடம் உரையாற்றவில்லை என்றும், உள்துறைச் செயலாளர் அறிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  மே 17ஆம் தேதிக்கு பின் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்