மிகுந்த எச்சரிக்கை உடன் அரசு செயல்படுகிறது" - ஆர்.பி.ஐ. அறிவிப்புகளுக்கு அமித்ஷா வரவேற்பு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு மிகுந்த கவனமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு மிகுந்த கவனமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் மக்களுக்கு மிக குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், வரும் காலத்தில் வலுவான, நிலையான நாட்டை உருவாக்க ஏதுவாக, இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ள அறிவிப்புகள் இருக்கும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் வகையிலும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த அறிவிப்புகள் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.