கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டம்
கொரோனாவிற்கான தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பான மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனைக்கான திறனை விரிவுபடுத்துவதற்காக, போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த சந்திப்பில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குநரான மருத்துவர் முரேகர், நாடு முழுவதும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 906 ரத்த மாதிரிகள் இதுவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4 புள்ளி 3 சதவீதம், அதாவது 7 ஆயிரத்து 953 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். கொரோனா வைரசுக்கு 40க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்த…