இந்தியாவில் 8,356 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-12 16:44 GMT
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 29ம் தேதி 979 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக இருப்பதாகவும் நிலைமையை நிர்வகிப்பதில் அரசு அமைப்புகள் தீவிரமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும்  அதிகமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்