இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்ணுக்கு 40 ஆண்டுகளுக்கு பின் இந்திய குடியுரிமை

இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-24 23:33 GMT
இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியை சேர்ந்தவர் முகம்மது தாஜ். இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கதீஜா பர்வீனை 40 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கதீஜா பர்வீனுக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழை மாவட்ட வளர்ச்சி அதிகாரி வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் முதல் முறையாக பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின் கீழ், அவருக்கான குடியுரிமை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்