"தகுதிக்கு பின் குடியுரிமை கோரி விண்ணப்பம்" - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், உரிய தகுதிக்கு பிறகு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-12-20 20:55 GMT
இது தொடர்பாக உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் கேட்டபோது, தமிழகத்தில் தற்போது, 95 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாகவும், மத்திய- மாநில அரசுகள், இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 1964 மற்றும் 1974 ஆம் ஆண்டு கால கட்டங்களில், இரு நாட்டு பிரதமர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக 4 லட்சத்து 61 ஆயிரம் இந்திய வம்சாவளியை சார்ந்த இலங்கை தமிழர்களுக்கு,  இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாக கிஷன் ரெட்டி நினைவு கூர்ந்தார். தற்போதைய சூழலில், தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள், உரிய தகுதிக்கு பிறகு, இந்திய குடியுரிமை கோரி, விண்ணப்பிக்கலாம் என்று கிஷன் ரெட்டி தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்