மோடியின் அமெரிக்கா சுற்றுப்பயணம் - சிறப்பிக்க இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி, செப்டம்பர் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், 'நலமா மோடி?' என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி, அங்கு டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை "ஹவுடி, மோடி!" என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். டெக்சாஸ் மாகாணம், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாநிலமாகும். இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகம் வசிப்பதுடன், பெரும் பணக்காரர்களாகவும், வர்த்தகத் துறையிலும் முன்னணியில் உள்ளவர்கள். அங்குள்ள டெக்சாஸ் இந்தியா மன்றம் சார்பில், என்ஆர்ஜி என்கிற ஸ்டேடியத்தில் இந்த மாநாட்டு நடக்க உள்ளது, இந்த ஸ்டேடியம் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றாகும்.