தலைமை நீதிபதி ராஜினாமாவுக்கு, அகில இந்திய பார் அசோசியேஷன் எதிர்ப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமானியின் ராஜினாமா செய்ததற்கு அகில இந்திய பார் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அகில இந்திய பார் அசோசியேஷனின் தலைவர் ஆதிஷ் சி. அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடமாற்றத்தை எதிர்த்து ராஜினாமா செய்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்த போதெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டு, தற்போது இடமாற்றத்தை மட்டும் எதிர்ப்பது கொலீஜியத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், மேகாலயா மக்களை இழிவுபடுத்தும் செயல் என அறிக்கையில் ஆதிஷ் சி அகர்வால் சுட்டிக் காட்டியுள்ளார்.