"பிரதமரின் கருத்தை வருமான வரித்துறை புரிந்து கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
பிரதமர் மோடியின் கருத்தை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேசத்திற்காக செல்வத்தை உருவாக்கும் ஒவ்வொருவரும் நாட்டுக்கு செல்வம் என்ற பிரதமர் மோடியின் கருத்தை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தேசத்தின் செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்றும், அவர்களை சந்தேக கண்ணோடு பார்க்க கூடாது எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிதம்பரம் விடுத்துள்ள பதிவில், பிரதமரின் கருத்தை வருமான வரி மற்றும் புலனாய்வு துறையினர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.