புலிகளுக்கு ஏற்ற பாதுகாப்பான வாழ்விடம் இந்தியா - பிரதமர் மோடி
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி டெல்லியில் 2018 ஆம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் இரண்டாயிரத்து 967 புலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புலிகள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா அந்த இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்னரே எட்டியுள்ளதாக பெருமிதம் கொண்டார். இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 526 புலிகள் இருப்பதாக தெரிவித்த மோடி, புலிகளுக்கு ஏற்ற பாதுகாப்பான வாழ்விடம் கொண்ட நாடு இந்தியா என்றார். இந்த தகவல் இயற்கையை ரசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கு மகிழ்ச்சியளிக்க கூடியது என்றும் அவர் கூறினார்.