ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-07-05 23:14 GMT
புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் தெருமுனை பிரசாரம் நடத்தவும் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் டெல்லி  சென்று 
பிரதமர் மோடி மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்