ஜி.டி.பி வளர்ச்சியை நோக்கமாக கொண்ட பட்ஜெட் : தொழில்கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் கருத்து
மொத்த உள்நாட்டு உற்பத்தியை, வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்லும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை, வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்லும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் இதனை, அவர் தெரிவித்தார். அந்நிய நேரடி முதலீடு எளிதாக்கப்பட்டுள்ளதாகவும், 400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு, வரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை உயர்த்தியது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.