புதுச்சேரி : பாசிக் நிறுவன ஊழியர்கள் தொடர் தர்ணா
புதுச்சேரியில், நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில், நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சார்பு நிறுவனமான, 'பாசிக்' மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் மற்றும் பல்வேறு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து 'பாசிக்' தலைமை அலுவலகம் முன்பு முற்றுகையிட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வேளாண்துறை இயக்குநர் சாந்தியை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.