ஆந்திரா : 28 செம்மரங்களை கடத்த முயற்சி - கடத்தல்காரர்கள் 5 பேர் கைது

ஆந்திர மாநிலம் கே.வி.பிபுரத்தை அடுத்த காலங்கி நீர்தேக்க பகுதியில், செம்மரக் கடத்த முயன்றதாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 28 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-06-22 07:31 GMT
ஆந்திர மாநிலம் கே.வி.பிபுரத்தை அடுத்த காலங்கி நீர்தேக்க பகுதியில், செம்மரக் கடத்த முயன்றதாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 28 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் பிச்சாட்டூர் பகுதிக்கு விரைந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடத்தல் கும்பலை மடக்கி பிடித்துள்ளது. கைதான வரதராஜுலு, சூர்யா, சிவய்யா, சந்திரகிரி, தொரவேலு ஆகிய ஐந்து பேரும், கே.வி.பி.புரம், காளஹஸ்தி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்