சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது : கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-29 23:35 GMT
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்றும் கூறினார். சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தேர்தலில் தோல்வியடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் பேசினாலும், சபரிமலை விவகாரம் தொடர்பான கேரள அரசின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்