புல்லாங்குழல் ஆனது, தடியடி நடத்தும் கம்பு : காக்கிச் சட்டைக்குள் கசியும் இசையருவி
கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தன்னிடம் இருக்கும் போலீஸ் தடியையை குழலாக மாற்றி உள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தன்னிடம் இருக்கும் போலீஸ் தடியையை குழலாக மாற்றி உள்ளார். அங்குள்ள ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சந்திரகாந்த் குட்டகி என்ற போலீஸ்காரர், பள்ளிப் பருவத்தில் இருந்தே புல்லாங்குழல் வாசிப்பது தனது பொழுதுபோக்கு என கூறுகிறார். இதனால், பணிக்காக தனக்கு தரப்பட்ட ஃபைபரால் ஆன தடியை, அப்படியே புல்லாங்குழலாக மாற்றி விட்டார். தற்போது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தடியாகவும், இசையருவியை வழங்கும் புல்லாங்குழலாகவும் இரண்டு பணிகளுக்கு பயன்படுவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.