மாநில காங். கட்சி செயற்குழு கூட்டம் : புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. இதில், முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்ட அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல்காந்தி ராஜினாமா செய்யும் முடிவை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, காவலர் தேர்வுக்கான, வயது வரம்பு 24 - ஆக தளர்த்தப்பட்டதாகவும், இதனால், ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற உள்ளதாக கூறினார். மேலும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதால், தாம் அதில் பங்கேற்க உள்ளதாக கூறினார்.