அதி தீவிர புயலாக வலுப்பெற்ற ஃபானி : ஒடிசா, ஆந்திராவில் கடல் கொந்தளிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ஃபானி, வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ஃபானி, வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசாவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபானி புயல் வலுவடைந்து ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரையை நெருங்கி உள்ளதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சூறைக்காற்றுடன் ராட்சத அலைகள், வேகமாக வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும் போது சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.