தீப்பிடித்து எரிந்த கடற்படை கப்பல்கள் - கடல் மற்றும் மீன்வள ஆராய்ச்சி கப்பல்கள் சேதம்
விக்ரம் மற்றும் சூர் கப்பல்களில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்திய கடற்படைக்கு சொந்தமான விக்ரம் மற்றும் சூர் கப்பல்களில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 விஞ்ஞானிகள் உள்ளிட்ட 30 பேருடன் கடலுக்குள் நின்ற அந்தக் கப்பல்கள் ஆராய்ச்சி பொருட்களால் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.நள்ளிரவில் நடந்த சம்பவம் அறிந்து சென்ற மீட்புப் படையினர், நீண்ட போராட்டத்துக்கு பின்னர், தீயை அணைத்து கப்பல்களை மீட்டனர். தற்போது, கப்பல்கள் இரண்டும் மங்களூரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன