கிடப்பில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் - புதிய கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசு
முடிவடையாமல் உள்ள நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவாக நிறைவேற்ற புதிய கொள்கையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
முடிவடையாமல் உள்ள நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவாக நிறைவேற்ற புதிய கொள்கையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. ஐ.எல். அண்ட் எஃப். எஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள், கட்டுமான பணிகள் முடிவடையாமல் முடங்கியுள்ளன. சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்ட பணிகள் முடங்கி உள்ளதால், அவற்றை விரைவாக முடிப்பதற்கு புதிய கொள்கைகள் கொண்டுவரப் பட உள்ளன. இது தொடர்பான விவரங்களை அளிக்க நெடுஞ்சாலை ஆணையம், சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.