செம்மர கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
ரூ.2 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில், செம்மரக் கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுப்புராஜ், நாகினி சிவா, நாராயணா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தபோது, சென்னை செங்குன்றத்தில் உள்ள ராம்குமார் என்பவருக்கு செம்மரங்களை வெட்டி அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னைக்கு வந்து ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான முதல் ரக 66 செம்மரக்கட்டைகள், ஒரு கார் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ராம்குமார் மீது தற்போது வரை 48 வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.